அபூர்வ ராகமாய், ராஜபார்வை கொண்டு, என்றுமே இளமை ஊஞ்சலாடும் நீ -- ஒரு புன்னகை மன்னன். கலைஞன். மகாநதி. நாயகன். தேவர் மகன். சிங்காரவேலன். சகலகலாவல்லவன். வசூல் ராஜா. ஆளவந்தான். இந்தியன்... உன்னை பார்த்தாலே பசிதீரும். இது அக்னி சாட்சி. உன் உயர்ந்த உள்ளம் என்றும் அழியாத கோலங்கள். உன்னை போல் ஒருவன் வேறு எவனும் இங்கு உண்டோ? நீ எடுக்கும் ஒவ்வொரு விஸ்வரூபமும் வெற்றிவிழாவே! நினைத்தாலே இனிக்கும் உன் புகழ் எங்கும் மங்கல வாத்தியமாய் ஒலிக்கட்டும். இது பேர் சொல்லும் பிள்ளைக்கு என் பாதகாணிக்கை!