வர்தா புயலால் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி: புரட்சித்தலைவி அம்மா வழி தமிழகரசு அறிவிப்பு
#Vardahcyclone #Financial
புயல் பாதித்த எண்ணுார், திருவெற்றியூர் ஆகிய பகுதிகளில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு போர்வை, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் கொடுத்தார்.
வர்தா புயல் பாதிப்பில் பலியானவர்களின் குடும்பத்துக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் 6 அமைச்சர்கள் மேற்பார்வையில் ஈடுபட்டுள்ளனர். 97 முகாம்களில் 10, 432 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
100 நடமாடும் மருத்துவக் குழுக்கள், 50 தொற்று நோய் தடுப்புக் குழுக்கள் சுகாதார பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 113 ஆம்புலன்ஸ்கள் மீட்பு பணிகளுக்காக தயார்நிலையில் உள்ளன.
நாளை காலைக்குள் மின் இணைப்பு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் சீராகும். இதற்காக, மின் விநிநோயகம் சீரமைக்கும் பணியில் 4,000 களப்பணியாளர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.